The Grasshopper and the Ant - Short Story for Kids in Tamil

எறும்பும் வெட்டுக்கிளியும் - சிறுகதை

 The Grasshopper and the Ants - Short Story for Kids

The Grasshopper and the Ant Short Story with picture and pdf
The Ants and the grasshopper story

ஒரு அழகிய வசந்த கால நாளில், வெட்டுக்கிளி ஒன்று புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக எறும்புகள் வரிசையாக கோதுமை தானியங்களை எடுத்துச் செல்வதைக் வெட்டுக்கிளி கவனித்தது. வெட்டுக்கிளி எறும்புகளிடம், "இந்த கோதுமைகளுடன் நீங்கள் எங்கே செல்கிறீகள் என கேட்டது?".

அதற்கு எறும்பு "இன்னும் சில மாதாங்களில் குளிர்காலம் வந்துவிடும் அதனால் நாங்கள் இப்பொழுதே அதற்க்காக தானியங்களை சேகரிக்கிறோம்" என்று கூறியது. "ஆனால் குளிர்காலத்திற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. நீங்களும் என்னுடன் சேர்ந்து விளையாட வாருங்கள்" என்று வெட்டுக்கிளி கூறியது.
Tamil Short Story for Children

"வரவிருப்பது  பனிப்பொழிவுடன் கூடிய நீண்ட குளிர்காலமாக இருக்கும். நீங்களும்  எங்களை போல் இப்பொழுதே உங்கள் உணவை சேமித்து வைப்பது நல்லது" என்று எறும்பு பதிலளித்தது.

"குளிர்காலத்தைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? இது வசந்த காலம் எல்லா இடங்களிலும் நிறைய உணவுகள் உள்ளன” என்று வெட்டுக்கிளி கூறியது. வெட்டுக்கிளி எறும்பு சொல்வதைக் கேட்கவில்லை. வசந்த காலம் முழுவதும், வெட்டுக்கிளி சாப்பிடுவது, தூங்குவது மற்றும் விளையாடுவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. 
The Grasshopper and the Ant story

பின்னர் கோடை வந்தது. எறும்புகள் குளிர்காலத்திற்கான உணவை சேகரிப்பதில் மும்முரமாக இருந்தன, ஆனால் வெட்டுக்கிளி சாப்பிடுவதையும் தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யவில்லை. 
Moral Short Stories for kids with free pdf download

பின்னர் இலையுதிர் காலம் வந்தது. எறும்பு வெட்டுக்கிளிக்கு குளிர்காலத்திற்கான உணவை சேகரிக்க அறிவுறுத்தியது, ஆனால் வெட்டுக்கிளி கேட்கவில்லை. "குளிர்காலம் இன்னும் வரவில்லை, அது வரும்போது, என்னால் உணவைக் கண்டுபிடிக்க முடியும்." என்றது வெட்டுக்கிளி.

சில வாரங்களுக்குப் பிறகு, குளிர்காலம் வந்தது, பனி பொழியத்  தொடங்கியது. எறும்புகள் சொன்னது போலவே, பனி மிகவும் அதிகமாக  இருந்தது.

எறும்புகள் அனைத்தும் தங்களின் கூட்டில் சேகரித்து வைத்த உணவுகளுடன் சந்தோசமாக இருந்தன. 

ஆனால் வெட்டுக்கிளி குளிர்காலம் முழுவதும் பசியாலும் குளிராலும் கஷ்டப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு குளிர்காலம் முடிந்தது.

வெட்டுக்கிளி வாழ்விற்கு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டது. அடுத்த வசந்த காலத்தில், வெட்டுக்கிளி எறும்புகளுடன் சேர்ந்து உணவு சேகரிக்கச் ஆரம்பித்தது.
Online Short Stories for Kids
கதையின் நீதி: 
  • இன்று வேலை செய்யுங்கள், நாளை நீங்கள் பலன்களைப் பெறலாம். 
  • கடந்து போன காலம் கரணம் போட்டாலும் வராது
  • நாளைக்கான சிறந்த தயாரிப்பு, இன்று உங்களால் முடிந்ததைச் செய்வதே. - H. Jackson Brown, Jr.
Moral Of the Story: 
  • Work today and you can then reap benefits tomorrow.
  • The Best preparation for tomorrow is doing your best today. - H. Jackson Brown, Jr.

Click here to read The Grasshopper and the Ant story in English

You can also free download The Grasshopper and the Ant story PDF.


I hope you all enjoyed The Grasshopper and the Ant short story for kids in Tamil.

Read More Short Stories for Kids from this website.

Post a Comment

Previous Post Next Post