The Hare and The Tortoise Moral Story
முயலும் ஆமையும் – சிறுகதை
ஒரு காட்டில் கர்வமுள்ள முயல் ஒன்று வசித்து வந்தது. அதற்கு தான்தான் மிக வேகமாக ஓட கூடிய விலங்கு என்ற கர்வம் உண்டு.
ஒரு நாள் மெதுவாக நகரும் ஆமையைப் பார்த்து, “நீ மிக வேகமாகச் செல்கிறாய் , என்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா” என்று ஏளனமாக கேட்டது.
முயலைப் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பது ஆமைக்குத் தெரியும், ஆனாலும் முயலின் கர்வத்தை ஆடக்க வேண்டும் என்று நினைத்து, “நான் பந்தயத்திற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறி சவாலை ஏற்றுக்கொண்டது. மற்ற விலங்குகள் பந்தயத்திற்கு ஒரு நாளை நிர்ணயத்தார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட நாளில், முயல் மற்றும் ஆமை இரண்டும் தொடக்கப் புள்ளிக்கு வந்தன. அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மைல் தொலைவில் உள்ள ஒரு பெரிய ஆலமரம் வரை ஓட வேண்டியிருந்தது. அது உண்மையில் ஆமைக்கு நீண்ட தூரம். பந்தயம் தொடங்கியது. ஆமை மெதுவாக முன்னேறத் தொடங்கியது. முயல் மீக வேகத்தில் ஓடியது.
சிறிது நேரம் ஓடிய பிறகு, ஆமை வெகு தொலைவில் இருந்ததை பார்த்த முயல் ஓய்வெடுக்க நினைத்து, மரத்தடி நிழலில் படுத்து உறங்கியது. இதற்கிடையில், ஆமை மெதுவாகவும் சீராகவும் நகர்ந்தது. வழியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முயலைக் கண்டது.
ஆமை தொடர்ந்து நகர்ந்து கடைசியில் வெற்றிப் புள்ளியை அடைந்தது.
சிறிது நேரம் கழித்து எழுந்த முயல் வேகமாக ஓட ஆரம்பித்தது. இறுதிப் புள்ளியை அடைந்ததும், சிரித்த முகத்துடன் காத்திருந்த ஆமையை கண்டு, முயல் வெட்கத்தில் தலை குனிந்தது.
கதையின் நீதி:
விவேகமும் விடா முயற்சியும் வெற்றியை தரும் அலட்சியம் தோல்வியை தரும்
Moral of the story:
Slow and Steady Wins the Race.
Popular Quote:
“It does not matter how slowly you go as long as you do not stop” – Confucius.
- “The trees that are slow to grow to bear the best fruit” – Moliere
You can also download this story in PDF.
I hope you all enjoyed the moral story The Hare and The Tortoise – Short Story in Tamil.
For more Animal & Birds-based moral stories, click here.
Read More Short Stories for Kids from this website.
Support our other site, www.mondayquotes4u.com, for Inspirational & Motivational Quotes in beautiful pictures.