The Talkative Tortoise - Moral Story in Tamil

 பேசும் ஆமை - தமிழ் சிறுகதை

The Talkative Tortoise story in Tamil

The Talkative Tortoise Short Story with pictures and PDF
The Talkative Tortoise story - பேசும் ஆமை சிறுகதை

ஒரு ஊரில் உள்ள குளத்தில் ஒரு ஆமை வாழ்ந்து வந்தது. அந்த குளத்திற்கு இரண்டு அன்னப்பறவைகள் தினமும் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம். அந்த அன்னங்களுடன் ஆமை எப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கும். அன்னப்பறவையும் ஆமையும் நல்ல நண்பர்களாக மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஒருமுறை வறட்சி ஏற்பட்டு நீண்ட காலம் நீடித்தது, குளத்தில் தண்ணீர் வற்றியது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போனது.

பேசும் ஆமை - தமிழ் சிறுகதை
Moral Stories for Kids

அன்னப்பறவைகள் வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்தன. ஆமை தன்னையும் அழைத்து செல்லுமாறு கேட்டது. அன்னம் ஒரு திட்டத்தை
ஆமையிடம் கூறியது. அதன்படி அன்னங்கள் ஒரு குச்சியின் இரண்டு முனைகளை  தங்கள்  வாயில் பிடித்துக்கொண்டு இருக்க, ஆமை அந்த குச்சியின் நடு பகுதியை வாயில் பிடித்து தொங்கியபடி செல்ல முடிவு செய்தது.
 
பேசும் ஆமை - தமிழ் சிறுகதை
English Short Stories for kids

அன்னம் ஆமையிடம் பேசாமல் வரவேண்டும் இல்லையென்றால் கீழே விழுந்து இறந்து விடுவாய் என கூறியது. ஆமை பேசாமல் இருப்பதாக சம்மதித்து.
 
பேசும் ஆமை - தமிழ் சிறுகதை
The Talkative Tortoise short story Tamil

ஒரு கிராமத்தை கடந்து செல்லும்போது, மக்கள் வியந்து பார்த்தனர், சிலர் ஆமையை கிண்டல் செய்தனர். கோபமடைந்த ஆமை பேச வாயை திறந்தது, பொறுமை இல்லாததால் ஆமை கீழே விழுந்து இறந்துவிட்டது.

பேசும் ஆமை - சிறுகதை
நாரையும் ஆமையும் கதை Short Stories for Kids

கதையின் நீதி: 
  • பொறுமை கடலினும் பெரிது - வள்ளுவர் 
  • பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற கனியோ மிகவும் இனிப்பானது - அரிஸ்டாடில்

Moral Of the Story: 
  • Always listen to friendly advice.
  • Impatience never commanded success  -  Edwin H. Chapin

Click here to read this Tortoise Moral story in English

You can also download this The Talkative Tortoise story PDF.

I hope you all enjoyed the story The Talkative Tortoise moral story in Tamil.

Read More Short Stories for Kids from this website.

Post a Comment

أحدث أقدم